ஆதார் - பான் எண் இணைப்பதற்கான கால அவகாசத்தை மத்திய அரசு மேலும் 3 மாதங்கள் நீட்டித்துள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம் கடந்த 2017-ம் ஆண்டு ஜூலை 1-ம் தேதி அறிவிக்கை வெளியிட்டது. அதன்பிறகு ஆதார்-பான் இணைப்புக்கான அவகாசம் பல முறை நீட்டிக்கப்பட்டது.