கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் வாபஸ்: மத்திய அரசு எச்சரிக்கை.
புதுடில்லி: மலைப் பிரதேசங்களில் கோவிட் கட்டுப்பாடுகளை மக்கள் பின்பற்றவில்லை எனவும், கட்டுப்பாடுகளை பின்பற்றாவிட்டால் தளர்வுகள் திரும்பப் பெறப்படும் என்றும் மத்திய சுகாதாரத்துறை எச்சரித்துள்ளது.
இந்தியாவில் கோவிட் 2வது அலையின் தாக்கம் படிப்படியாக குறைந்து வருகிறது. கடந்த 111 நாட்களுக்கு பிறகு தினசரி கோவிட் பாதிப்புகள் 34 ஆயிரத்தை அடைந்தது. பாதிப்புகள் குறைந்து வருவதால், பல இடங்களில் மக்கள் கோவிட் கட்டுப்பாடுகளை பின்பற்றாமல் இருக்கின்றனர். இது கோவிட் 3வது அலைக்கு வழிவகுக்கும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். ஊரடங்கு தளர்வுகளால் மக்கள் நடமாட்டம் அதிகரித்துள்ளதாகவும் கவலை தெரிவிக்கின்றனர்.