அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

ஜியோவுடன் போட்டியிடும் விதமாக Vodafone Idea புதிய திட்டம் அறிமுகம்

ரிலையன்ஸ் ஜியோவுடன் போட்டியிட வோடபோன் ஐடியா (Vi) புதிய அற்புதமான ப்ரீபெய்டு திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த திட்டத்தின் விலை ரூ .267 ஆகும். மேலும் இதில் ஒரே கட்டமாக 25 ஜிபி டேட்டா கிடைக்கும். Vi இன் இந்த புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் முழு விவரத்தை இங்கே பார்போம். 

Vodafone Idea அறிமுகப்படுத்திய இந்த புதிய ப்ரீபெய்டு திட்டத்தின் (Prepaid Plans) வேலிடிட்டி தன்மை 30 நாட்கள் ஆகும். வோடபோன் ஐடியாவின் இந்த திட்டத்தில் அன்லிமிட்டட் காலிங் வசதியும் கிடைக்கிறது. Vi நிறுவனம் சமீபத்தில் ரூ. 447 விலையில் ஒரு பிரீபெயிட் சலுகையை அறிவித்தது. அதில் 60 நாட்கள் வேலிடிட்டி கொண்ட சலுகையில் 50 ஜிபி டேட்டா வழங்கப்பட்டது. முன்னதாக இதேபோன்ற சலுகையை ஜியோ மற்றும் ஏர்டெல் நிறுவனங்களும் அறிவித்து இருந்தன.

இந்நிலையில் தற்போது ரூ. 267 விலையில் வோடபோன் ஐடியா (Vi) புது பிரீபெயிட் சலுகையை அறிவித்து இருக்கிறது. இதில் 30 நாட்களுக்கு 25 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. டேட்டா மட்டுமின்றி Vi மூவிஸ், டிவி கிளாசிக் போன்ற சேவைகளுக்கான சந்தாவும் இந்த சலுகையில் வழங்கப்படுகிறது. 

இந்த புது பிரீபெயிட் சலுகை Vi வலைதளத்தில் பட்டியலிபட்டப்பட்டு இருக்கிறது. மேலும் இதற்கு போட்டியாக ரிலையன்ஸ் ஜியோவின் ரூ. 247 பிரீபெயிட் சலுகையிலும் 25 ஜிபி டேட்டா 30 நாட்களுக்கு வழங்கப்படுகிறது. இத்துடன் தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது. அதேபோல் ஏர்டெல் ரூ. 299 சலுகையில் அன்லிமிடெட் அழைப்புகள், தினமும் 100 எஸ்எம்எஸ், 30 ஜிபி டேட்டா உள்ளிட்டவை 30 நாட்கள் வேலிடிட்டியுடன் வழங்கப்படுகிறது.