அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

Pan Card -Aadhar Link Final SBI

 

SBI வங்கி வாடிக்கையாளர்கள் கவனத்திற்கு – ஆதார் & பான் இணைப்பு இறுதி நாள்!


ஆதார் -பான் இணைப்பு:

மத்திய அரசு அனைத்து ஆவணங்களையும் ஆதார் அட்டையுடன் இணைக்க உத்தரவிட்டுள்ளது. இதற்கான பணிகள் கடந்த சில வருடங்களாக படிப்படியாக நடந்து வருகிறது. வருமான வரி அறிக்கையை தாக்கல் செய்ய பான் எண்ணும், எல்பிஜி மானியம், உதவித்தொகை மற்றும் ஓய்வூதியம் போன்ற அரசாங்க திட்டங்களிலிருந்து பண பலன்களைப் பெற ஆதார் எண்ணும் பயன்படுத்தப்படுகிறது. பான் கார்டு மற்றும் ஆதார் கார்டு இணைப்பிற்காக அரசு முன்னதாக பல முறை அவகாசம் வழங்கியுள்ளது.

ஆனால் தொடர்ந்து கொரோனா கால ஊரடங்கு தொடர்வதால் இதற்கான அவகாசம் நீடிக்கப்பட்டு வந்தது குறிப்பிடத்தக்கது. எஸ்பிஐ வங்கி தனது வாடிக்கையாளர்களுக்கு அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி ஆதார் மற்றும் பான் இரண்டையும் இணைக்க வலியுறுத்தியுள்ளது. மேலும், மார்ச் 31ம் தேதிக்குள் இணைக்க வேண்டும் என்றும், இல்லையெனில் முழுமையான வங்கி சேவையை பெற முடியாது என்றும் எஸ்பிஐ வங்கி எச்சரித்துள்ளது.