அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

இன்றே கடைசி நாள் ?

ஆதார் - பான் கார்டு இணைக்க இன்றே கடைசி நாள் - வருமான வரித்துறை எச்சரிக்கை.



ஆதாருடன் பான் கார்டு எண்ணை இணைப்பதற்கு இன்றே கடைசி நாள் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி இன்றைக்குள் பான் கார்டு வைத்திருப்பவர்கள் ஆதாருடன் பான் எண்ணை இணைக்காவிட்டால், அபராதம் விதிக்கப்படும் என்றும், ஆதாருடன் இணைக்காத பான் கார்டு செயல்படாது என்று அறிவிக்கவும் நேரிடும் என்று வருமான வரித்துறை எச்சரித்துள்ளது. 

இதுதொடர்பாக மத்திய நேரடி வரிகள் வாரியம் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஏப்ரல் 1-ம் தேதி முதல் ஆதார்-பான் எண் இணைப்பு கட்டாயம் என்றும், அதன்பின்னர் முதல் மூன்று மாதத்திற்குள் பான் எண்ணை இணைக்காவிட்டால் 500 ரூபாய் அபராதம், அதன்பிறகு அபராத தொகை 1000 ரூபாயாக அதிகரிக்கப்படும் என்று கூறியுள்ளது.