ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவது எப்படி? முழு விவரங்களுடன்!
மேலும், ஆதார் கார்டில் பெயர், முகவரி ஆகியவற்றில் பிழைகள் இருந்தால் ஆன்லைன் மூலமாகவே சரி செய்துகொள்ள முடியும். ஆனால், ஆதார் கார்டுடன் மொபைல் எண்ணை இணைத்தல் மற்றும் ஆதார்கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றுவதற்கு அருகில் உள்ள ஆதார் மையத்தை நேரில் தொடர்புகொள்ள வேண்டும். தற்போது எப்படி ஆதார் கார்டில் இருக்கும் புகைப்படத்தை மாற்றம் செய்வது என்பதை பார்க்கலாம். முதலில், யுஐடிஏஐ (இந்திய தனித்துவ அடையாள ஆணையம்)த்தின் அதிகாரப்பூர்வமான இணையதளமான uidai.gov.in என்கிற பக்கத்திற்கு சென்று ஆதார் பதிவு படிவத்தை பதிவிறக்கம் செய்துகொள்ள வேண்டும்.
பின்பு, அந்த படிவத்தினை எந்த பிழையும் இல்லாமல் நிரப்பி அருகிலுள்ள ஆதார் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். மேலும், பாஸ்போர்ட், வாக்காளர் அடையாள அட்டை முதலான ஆவணங்களையும் ஆதார் மையத்தில் ஒப்படைக்க வேண்டும். இதனையடுத்து, புகைப்படம் மற்றும் பயோமெட்ரிக் தகவல்களை வழங்க வேண்டும் மற்றும் இதற்குரிய ரசீது வழங்கப்படும். மேலும், ஆதார் கார்டில் உள்ள புகைப்படத்தை மாற்றம் செய்வதற்கு ரூ.25 கட்டணமாக செலுத்த வேண்டும். இதனையடுத்து, இரண்டு வாரங்களுக்கு பிறகு புதுப்பிக்கப்பட்ட ஆதார் அட்டை கிடைத்துவிடும்.
