இந்தியாவின் சுதந்திர தினத்தை முன்னிட்டு இந்தியாவுக்கு பயணிக்க 330 திர்ஹாம் மட்டுமே: ஏர் இந்தியா நிறுவனம் அறிவிப்பு
இந்த சலுகை அக்டோபர் 8 மற்றும் அக்டோபர் 21 ஆகிய தேதிகளில் மட்டுமே உள்ளன.
"One India One Fare" என்ற முயற்சிகளின் கீழ், ஓமான் தவிர அனைத்தும் வளைகுடா நாடுகளில் இருந்து இந்தியாவுக்கு பயணிக்கும் பயணிகளுக்கு சிறப்பு சுதந்திர தினத்தை முன்னிட்டு விமானங்களுக்கான சலுகையை ஏர் இந்தியா விமான நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது.
ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இருந்து சென்னை உள்பட இந்தியாவின் முக்கிய நகரங்களுக்கு விமான கட்டணம் 330 திர்ஹாமில் பயணிக்கலாம் என்று விமான நிறுவனம் அறிவித்துள்ளது. முதலாவதாக வருவோருக்கு முன்னுரிமை வழங்கப்படுவதாகவும் விமான நிறுவனம் அறிவித்துள்ளது.
ஆகஸ்ட் 8 மற்றும் ஆகஸ்ட் 21, 2022 பயணிக்கும் பயணிகளுக்கு இந்தச் சலுகையைப் பெறலாம். மேலும், சலுக காலங்களில் விற்கப்படும் அனைத்து டிக்கெட்டுகளுக்கும் அக்டோபர் 15 வரை செக் இன் பேக்கேஜ் 35 கிலோ மற்றும் கை பேக் 8 கிலோ அனுமதிக்கப்படுகிறது.
இந்த சிறப்பு சலுகை ஏர் இந்தியா இணையதளம், மொபைல் ஆஃப் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட பயண முகவர்கள் மூலம் கிடைக்கும்.
