அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

Aadhaar update free for next 3 months

ஜூன் 14 வரை.. ஆதார் தகவல்களை இலவசமாக அப்டேட் செய்யலாம்..



அடுத்த 3 மாதங்களுக்கு ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.


சென்னை: அடுத்த 3 மாதங்களுக்கு அதாவது ஆதார் கார்டு விவரங்களை இணையதளம் மூலமாக இலவசமாக புதுப்பிக்கலாம் என்று இந்திய தனித்துவ அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது. 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை ஆதார் விவரங்களை புதுப்பிக்க வேண்டும் என்று ஆதார் ஆணையம் தெரிவித்து இருந்த நிலையில், இந்த அறிவிப்பு தற்போது வெளியாகியுள்ளது.

மத்திய மாநில அரசுகளின் நலத்திட்டங்களை பெற ஆதார் எண் கட்டாயம் ஆக்கப்பட்டுள்ளது.

கட்டணமின்றி புதுப்பிக்க முடியும்

எந்தெந்த வங்கிகளில் இந்த சேவை அளிக்கபடும் என்ற விவரத்தையும் ஆதார் அடையாள ஆணையம் தனது இணையதளத்தில் குறிப்பிட்டுள்ளது. அதேபோல், மை ஆதார் மூலமாகவும் அப்டேட் செய்து கொள்ளலாம். எனினும் இந்த அப்டேஷன்களுக்கு ரூ. 25 கட்டணமாக செலுத்த வேண்டும். இந்த நிலையில் ஆதாா் தகவல்களை வரும் ஜூன் 14-ஆம் தேதி வரை இணையதளம் மூலமாக கட்டணமின்றி புதுப்பிக்க முடியும் என இந்திய தனிப்பட்ட அடையாள ஆணையம் (UAIDAI) தெரிவித்துள்ளது.

ஜூன் 14 ஆம் தேதி வரை

இது குறித்து அந்த ஆணையம் வெளியிட்ட அறிக்கையில், 'பொதுமக்கள் தங்கள் ஆதார் தகவல்களை மை ஆதார் வெப்சைட் பக்கத்தின் மூலமாக மார்ச் 15 ஆம் தேதி முதல் ஜூன் 14 ஆம் தேதி வரை இலவசமான முறையில் புதுப்பித்துக் கொள்ள முடியும்' என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், ஆதாா் சேவை மையங்களில் மேற்கொள்ளப்படும் அப்டேட்களுக்கு வழக்கத்தில் உள்ள கட்டணமான ரூ.50 செலுத்த வேண்டியிருக்கும் என்பதில் மாற்றம் இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் தகவல்களுக்கு :


அபிஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம்
விவேகானந்தர் சாலை,
செய்யது அம்மாள் மருத்துவமனை அருகில்,
இராமநாதபுரம்.
📲Cell : 9597681467
Email : abisriprinters@gmail.com

Online Services , Xerox , Wedding Card , Eb Bill , Etc...