அபி ஸ்ரீ பிரிண்டர்ஸ் இராமநாதபுரம், அழைப்பிதழ்கள், பில் புக்,நோட்டீஸ்,ஜெராக்ஸ், மற்றும் இ-சேவைகள் குறைந்த கட்டணத்தில் செய்து தருகிறோம் தொடர்புக்கு : 9597681467

பான் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடங்கும்

 பான் இணைக்காவிட்டால் வங்கி கணக்குகள் முடங்கும்' - தேடி வரும் SMS.. உண்மை என்ன?



SMS Alert : பான் கார்டு - ஆதார் இணைப்பை குறிப்பிட்டு SBI, HDFC வங்கி வாடிக்கையாளர்களுக்கு sms வருகிறது. அது உண்மையா என்பது குறித்து பார்க்கலாம்.


இந்தியாவின் மிகப்பெரிய அரசுத்துறை வங்கியான எஸ்.பி.ஐ தனது வாடிக்கையாளர்களுக்கு நவீன தொழில்நுட்பங்களை அடிப்படையாக கொண்ட சேவைகளை அறிமுகப்படுத்துவதிலும், பாதுகாப்பு அம்சங்களை பலப்படுத்துவதிலும் முதன்மையானதாக விளங்குகிறது.

ஆன்லைன் பண பரிவர்த்தனைகளை பாதுகாப்பாக மாற்ற வங்கிகள் பலகட்ட பாதுகாப்பு நடைமுறைகளைக் கடைபிடிப்பதால், ஹேக்கர்களும் புதுப்புது டெக்னிக்குகளை பயன்படுத்தி பணமோசடியில் ஈடுபட்டு வருகின்றனர்.அந்த வகையில் தற்போதைய ட்ரெண்டிங்கான பான் கார்டு - ஆதார் இணைப்பை கையில் எடுத்துள்ள ஹேக்கர்கள் இதன் மூலம் மோசடி செய்ய முயற்சித்து வருகின்றனர்

ஹேக்கர்கள் எஸ்பிஐ வங்கி வாடிக்கையாளர்களுக்கு sms மூலம் ஹேக் லிங்க் ஒன்றை அனுப்புகின்றனர். அதில், உங்கள் பான் கார்டை இணைக்காவிட்டால் விரைவில் உங்கள் வங்கி கணக்கு முடக்கப்படும் என்ற தகவலைச் சொல்லி ஒரு லிங்க் ஒன்றையும் அனுப்புகின்றனர். வங்கியில் இருந்து அனுப்பப்படும் எஸ் எம் எஸ் போலவே அந்த மெசேஜ் இருப்பதால் வாடிக்கையாளர்கள் அந்த மோசடி லிங்கை க்ளிக் செய்ய வாய்ப்புள்ளது. அதனால் அதுமாதிரியான smsகளை தவிர்த்து, லிங்குகளை நீங்கள் க்ளிக் செய்யாமல் இருங்கள்.

க்ளிக் செய்தால் என்ன நடக்கும்?
அந்த லிங்கை ஓபன் செய்தால் அது பேங்கிங் மாதிரியான வெப்சைட்டுக்கு செல்லும். அது கிட்டத்தட்ட ஒரிஜினலான பேங்க் இணையப்பக்கம் போலவே இருக்கும். அது வங்கியின் இணையப்பக்கம் என நீங்கள் உங்கள் கணக்கு விவரங்களை பதிவிட்டால் உங்கள் பணம் முழுவதும் திருடப்படும்.

sbi, hdfc உள்ளிட்ட பல வங்கிகளின் பெயர்களில் இந்த மோசடி நடைபெறுகிறது.